14000 மொபைல் போன்களைத் திருடிய 6 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது!

08 December 2020 அரசியல்
handcufffree.jpg

சென்னையில் இருந்து லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 14,000 எம்ஐ போன்களைத் திருடிச் சென்ற 6 கொள்ளையர்களை, மத்தியப் பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எம்ஐ செல்போன் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து, அக்டோபர் 22ம் தேதி அன்று 14,000 செல்போன்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று, மும்பை நோக்கிப் பயணித்தது. இந்த லாரியானது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் அமைந்துள்ள மேலுமலை அருகே சாலையில் சென்ற பொழுது, மர்ம நபர்கள் குழு ஒன்று அந்த லாரியினை மடக்கியது.

அந்த லாரியில் இருந்த டிரைவர்கள் மற்றும் க்ளீனரை மிரட்டி, அந்த லாரியினை கைப்பற்றினர். பின்னர், அங்கிருந்து அந்த லாரியினை எடுத்துக் கொண்டு சூளகிரி அருகே வைத்து, தங்களுடைய லாரிகளுக்கு அந்த போன்களை மாற்றிக் கொண்டு, கைப்பற்றியக் கண்டெய்னர் லாரியினை விட்டு விட்டு சென்றனர். இந்த வழக்கு இந்திய அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கினை விசாரிக்கவும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் நான்கு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 20 பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் ஈடுபட்டதாக புது டெல்லியில் கடந்த 18ம் தேதி அன்று தேஜ்வாணி என்பவரை கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து கொல்கத்தாவில் அமீதாபா தத்தா என்பவரையும், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் 40 வயதுடைய ரஜேந்தர் என்பவரையும் அவருடையக் கூட்டாளிகளையும் கைது செய்தனர். மொத்தம் ஆறு பேரினைத் தற்பொழுது போலீசார், மத்தியப் பிரதேசத்தில் கைது செய்து உள்ளனர். இவர்களிடம் இருந்து நான்கு லாரிகள், ஒரு கார் போன்றவைகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS