14,000 பேர் பலி! விஸ்வரூபம் எடுக்கும் மரணம்! சீனாவினை மிஞ்சிய இத்தாலி!

23 March 2020 அரசியல்
coronavirus08.jpg

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸானது, தற்பொழுது உலகின் 117க்கும் அதிகமான நாடுகளில் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இந்த வைரஸால், தற்பொழுது வரை சீனா உட்பட உலகம் முழுக்க, 2,50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கனடா, ரஷ்யா, இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள், தங்களுடைய எல்லைகளுக்கு சீல் வைத்து உள்ளனர். இதனால், சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, உலகளவில் பொருளாதார மந்த நிலையானது, உலகம் முழுக்க நிலவி வரும் நிலையில், தற்பொழுது மோசமாக ஆரம்பித்து உள்ளது.

சீனாவினைக் காட்டிலும், இந்தப் பாதிப்பானது தற்பொழுது இத்தாலியில் தான் அதிகமாகக் காணப்படுகின்றது. அங்கு பல ஆயிரம் பேர், இந்த வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார், 5500 பேர் இத்தாலியில் இந்த வைரஸ் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உலகம் முழக்க, மொதமாக 14,500 பேர் இந்த வைரஸால் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், 10 வயதிற்குட்பட்டவர்களும் ஆவர். அதிலும், ஏ பிளட் குரூப்பினை சேர்ந்தவர்களே, அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் தற்பொழுது வரை, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் உள்ள ஊஹான் பகுதியில், தற்பொழுது இந்த வைரஸ் பாதிப்புடையவர்களாக, புதிய நபர்கள் யாரும் வரவில்லை.

சீனாவின் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளின் காரணமாக, இந்த வைரஸ் தொற்றானது படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வருபவர்களின் காரணமாக, இந்த வைரஸ் தொற்று மற்ற மாகாணங்களில் பரவி வருகின்றது.

HOT NEWS