141 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

27 January 2020 அரசியல்
padmaawards.jpg

141 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. 71வது குடியரசு தினமானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, சமூகத்தில் சாதித்தப் பலருக்கு பத்ம விருதுகளை ஆண்டு தோறும் வழங்கி வருகின்றது மத்திய அரசு.

இந்த ஆண்டு 7 பத்ம விபூஷண் விருதுகளும், 16 பத்ம பூஷண் விருதுகளும், 118 பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை வாங்குபவர்களில், 34 பேர் பெண்கள் மற்றும் 18 பேர் வெளிநாட்டினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், இயற்கை எய்திய 12 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. முன்னாள் அமைச்சர்கள் அருண் ஜெய்ட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்ணான்டஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்ட்டன. மேலும், மறைந்த பேஜ்வாரா மத் சீர் விஷ்வேஸதீர்த்தா சுவாமிகளுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இவர்களை அடுத்து, முன்னாள் மொரீசியஸ் அதிபர் அனிரூத் ஜக்நாத், ஹிந்துஸ்தானி இசையமைப்பாளர் சன்னுலால் மிஷ்ரா, பாக்சிங் வீராங்கணை மேரி கோம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவின் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், எழுத்தாளர் மனோஜ் தாஸ், இறகுப் பந்து வீராங்கணை பி வி சிந்து, தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HOT NEWS