145 மாவட்டங்கள் கோவிட் 19 ஹாட்ஸ்பாட்! மத்திய அரசு அறிவிப்பு!

02 June 2020 அரசியல்
coronavirusold.jpg

இந்தியாவில் மொத்தம் 145 மாவட்டங்கள், கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸானது, கிட்டத்தட்ட 2,00,000 லட்சத்தினை நெருங்கி வருகின்றது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவும் இடங்களை கண்டறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. அதற்காக, இந்தியா முழுவதும் கொரோனா எங்கெல்லாம் அதிகமாகப் பரவி உள்ளது என சோதனைகள் நடைபெற்றன.

தற்பொழுது புலம் பெயரும் தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலங்களுக்குத் திரும்பி வருவதால், இந்த கொரோனா வைரஸ் பரவும் வேகமும் அதிதீவிரமாகி உள்ளது. இந்திய கேபினட் அமைச்சரவையின் கருத்துப் படி, இந்தியாவின் 12 மாநிலங்கள் தற்பொழுது கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் சுமார், 1,50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மாநிலங்களில் சுமார் 145 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளது.

இந்த மாவட்டங்களே, கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS