தற்பொழுது இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், மாபெரும் சரிவினைச் சந்தித்து உள்ளது.
தொடர்ந்து ஜியோ நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தில் குவிந்த முதலீடுகள் காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பானது பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டிற்கான நிகர லாபத்தின் மதிப்பினை, பங்குச் சந்தையில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, அந்த நிறுவனம் அந்தக் காலாண்டில் மட்டும், சுமார் 9,567 கோடி ரூபாயினை ஈட்டியுள்ளது.
அதே போல், அதற்கு முந்தையக் காலாண்டில் மட்டும் சுமார் 11,262 கோடி ரூபாயினை வருமானமாக ஈட்டியிருந்தது. இத்துடன் ஒப்பிடும் பொழுது, சுமார் 15% நிகர லாபமானது 2வது காலாண்டில் குறைந்துள்ளது. கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 2வது காலாண்டில் மட்டும் சுமார் 8,548 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கும் என கணித்த ரிலையன்ஸ் நிறுவனம் கூடுதலாக லாபம் ஈட்டியுள்ளது.
ஒரு வேளை இந்த லாபத்தின் சரிவானது நீடித்தால், அதன் எதிர்காலம் என்ன ஆகும் என்றக் கேள்வி எழுந்துள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தற்பொழுது யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.