கொரோனா வைரஸ் 1500 பேர் பலி! 65,000 பேர் பாதிப்பு! 10,000 பேர் கவலைக்கிடம்!

14 February 2020 அரசியல்
coronavirus121.jpg

சீனாவில் பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை 1,500 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வைரஸால் தற்பொழுது வரை 65,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில், ஊஹான் பகுதியில் இருந்து, கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள, வனவிலங்கு சந்தையில் இருந்து, இந்த வைரஸானது பரவ ஆரம்பித்தது. முதலில் அலட்சியமாக சீனா இருந்த போதிலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், இந்த நோயின் தீவிரத்தினைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பல இடங்களில், மக்கள் நடமாட்டம் இல்லை.

இன்னும் இந்த கொரோனா வைரஸ் நோய்க்கு, மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த நோயால் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளுக்கு இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், மளமளவென கூடி வருகின்றது. இந்த வைரஸானது, உலகின் 30 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவிற்கு, இந்தியா உட்பட பல நாடுகளும், தங்களுடைய விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த வைரஸ் காரணமாக, 1,500 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 65,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களில், 10,000க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக, தாய்லாந்து, ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தனித்தனியாக அறிவித்திருந்த போதிலும், இன்னும் இந்த நோய்க்கு அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

HOT NEWS