சீனாவில் பரவும் விசித்திர நோய்! ஒரே நாளில் 1,500 பேர் பாதிப்பு!

03 April 2020 அரசியல்
coronachina20.jpg

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோயானது உலகமெங்கும் பரவி வருகின்றது. இந்நிலையில், தற்பொழுது சீனாவின் ஊஹாண் பகுதியில், மீண்டும் புதிய வைரஸ் தொற்று ஒன்று உருவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த வைரஸால் தற்பொழுது வரை 1500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எவ்வித அறிகுறியும் இல்லாமல், இந்த புதிய வைரஸ் நோயானது பரவி வருகின்றது. இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை, சீன சுகாதாரத்துறை தற்பொழுது கண்டுபிடித்துள்ளது. அவர்களுக்கு எவ்வித இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருப்பதால், மருத்துவர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது வரை 10,16,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 2,11,000 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது, 53,069 எட்டியுள்ளது. இந்த வைரஸால் இந்தியாவும் தற்பொழுது பாதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பல அரசாங்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எப்படி வருகிறதென்றே தெரியாத வகையில், புதிய வைரஸ் பாதிப்பினை சீனா கண்டுபிடித்துள்ளதால், சீன மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், புதிதாக பரவி வருகின்ற வைரஸால் வெளிநாட்டவர்கள், 205 பேர் சீனாவில் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS