கோதுமை பாக்கெட்டுக்குள் 15,000! பொதுமக்கள் மகிழ்ச்சி! இவரா செய்தார்?

03 May 2020 அரசியல்
15000atta.jpg

டெல்லியில், கோதுமை பாக்கெட்டுகளுக்குள் 15,000 ரூபாய் வைத்து கொடுக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வருகின்ற மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், சாதாரண ஏழை மக்களும், நடுத்தர மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில், பலரும் தங்களால் இயன்ற உதவியினை செய்து வருகின்றனர். தமிழகத்தில், நடிகர்கள் ராகவா லாரன்ஸ் உட்பட பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

டெல்லியிலும் அப்படி ஒருவர், அனைவரும் வியக்கும் வகையில் உதவியுள்ளார். இந்த வீடியோவானது, டிக்டாக் உட்பட, பல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. டெல்லியில் உள்ள ஏழைகள் வசிக்கின்ற பகுதியில், லாரி ஒன்று நிவாரணப் பொருட்களுடன் வந்துள்ளது. அதனை நோக்கி, ஏழை எளிய மக்கள், திரண்டனர்.

அந்த லாரியில் இருந்து, ஒரு கிலோ எடையுள்ள கோதுமை பாக்கெட்டானது, அங்கு திரண்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அனைவரும் அமைதியாக வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். இந்நிலையில், அந்தப் பாக்கெட்டினைப் பிரித்து, கோதுமையை வெளியில் எடுத்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பாக்கெட்டுக்குள், 15,000 ரூபாய் பணம் இருந்துள்ளது. இதனால், அந்தக் கோதுமைப் பாக்கெட்டுகளை பெற்றவர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இது, தற்பொழுது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலானது. இந்த செயலினை, நடிகர் அமீர் கான் செய்துள்ளார் எனவும் பேச ஆரம்பித்தனர். ஆனால், அவர் இது செய்யவில்லை என பல செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

HOT NEWS