150கிராம் முதல் 250 கிராம் வரை அணுகுண்டு உள்ளன! பாகிஸ்தான் அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

04 September 2019 அரசியல்
sheikhrasheedahmad.jpg

pic credit:twitter.com/ShkhRasheed

எங்களிடம் 150 கிராம் முதல் 250 கிராம் வரை சிறிய அணுகுண்டுகள் உள்ளன என, பாகிஸ்தான் அமைச்சர் பேசியுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பலவிதமாக இந்தியாவை எச்சரித்தும், கண்டித்தும் வருகிறது. அவைகளில் தற்பொழுது அந்நாட்டு அமைச்சர் பேசியது தான் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேர்க அஹமத் ரஷித் காஷ்மீர் விவகாரம் குறித்து, பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அவ்வாறு அவர் பேசுகையில், எங்களிடம் துல்லியமாக இலக்கினைக் குறி வைத்து அழிக்கம் சக்தி கொண்ட, 150 கிராம் முதல் 250 கிராம் வரையிலான சிறிய ரக அணு குண்டுகள் உள்ளன. அவைகளை வீசினால், இந்திய நாடானது 22 பாகங்களாக பிரிந்து விடும்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவிக்க பாகிஸ்தானில் உள்ள அனைத்துக் கட்சியினருமே ஒன்று சேர்ந்து உள்ளோம்.

HOT NEWS