கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை 170 பேர் பலியாகி இருப்பதாக, சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவின், ஊஹான் பகுதியில் உள்ள வன விலங்குகளை விற்கும் சந்தையில் இருந்து, கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. சரியாக ஒரு மாதத்திற்குள், பல நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை, சீனாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களாக, சுமார் 7,700 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பானது, தற்பொழுது இந்த வைரஸ் பாதிப்பினை தொடர்ந்து, அவசரகால எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், யூஏஈ, தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வைரஸானது பரவி உள்ளது. இதில், சீனா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை, இந்த கொரோனா வைரஸ் காரணமாக 170 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும், அதீத பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால், இந்த உயிரிழப்பானது பல்லாயிரமாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக, விஞ்ஞானிகள் கவலைத் தெரிவிக்கின்றன.
கூட்டமாக யாரும் நடமாட வேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், இந்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது வரை, இந்த கொரோனா வைரஸ் நோய்க்கு எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.