18 பேர் பலி! தொடரும் பதற்றம்! வன்முறைக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு!

26 February 2020 அரசியல்
delhiviolencelatest1.jpg

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரத்தின் காரணமாக, தற்பொழுது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கிட்தட்ட கல்வீச்சு சம்பவம் மட்டும், ஐந்து முதல் ஏழு மணி நேரம் நடைபெற்று உள்ளது. அது மட்டுமின்றி, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, வாகனங்கள், கடைகள் என அனைத்தும் தீ வைக்கப்பட்டு உள்ளன. இதில், பெண்கள், மற்றும் இளைஞர்களும் அதிகளவில் ஈடுபட்டு உள்ளனர்.

தேசிய குடியுரிமை திருத்தத் சட்டம் மற்றும் சிஏஏ ஆகிய இரண்டிற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தத் சட்டம் மற்றும் சிஏஏ ஆகியவைகளுக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவினர் ஒரு பக்கம் போராட்டம் நடத்தினர். இதில், இரண்டு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே, இந்த வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில், காவல் துறை அதிகாரி உட்பட மொத்தம் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிபிஎஸ்சி தேர்வுகள் உட்பட, அனைத்துத் தேர்வுகளும் இந்த வன்முறையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான பகுதிகளுல், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனைப் பற்றி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

பின்னர் நள்ளிரவு என்எஸ்ஏ பிரிவு தலைவரான அஜித் தோவல், கலவரம் நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்தார். தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, வீதியில் இறங்கி கலவரங்களில் ஈடுபடுபவர்களை, கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் வடகிழக்குப் பகுதியே, இந்தப் பிரச்சனைகளால் போர்க்களமாக மாறியுள்ளது.

HOT NEWS