1860 பேர் பலி! தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் தீவிரம்! 72,000 பேர் பாதிப்பு!

18 February 2020 அரசியல்
coronaviruses.jpg

தற்பொழுது வரை இந்த கொரோனா வைரஸ் காரணமாக, 72,436 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில், 1860 பேர் மரணமடைந்து இருப்பதாகவும் சீனாவின் தேசிய சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் கடைசி மாதத்தில், இந்த கொரோனா வைரஸானது, ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஊஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்தது. கடந்த 45 நாட்களுக்குள் இந்த வைரஸ் பாதிப்பானது, உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும் பல்லாயிரம் பேர், இந்த கொரோனா வைரஸ் காரணமாக, அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, இரண்டு தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. மேலும், தற்பொழுது அந்த மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதால், புதிய மருத்துவமனைகளை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் நடமாட்டம், வெகுவாகக் குறைந்துவிட்டது. சீனாவின் பொருளாதாரம் மட்டுமின்றி, அந்நாட்டு வணிகமும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்டவைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், உலகப் பொருளாதாரத்தில் பெரிய தாக்கமும் ஏற்பட்டு உள்ளது.

நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, அதிகரித்து வருகின்றது. தற்பொழுது வரை இந்த கொரோனா வைரஸ் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1860 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கையானது, 72,436 ஆக உயர்ந்து உள்ளது. இது தொடர்ந்தால், மரணமடைபவர்களின் எண்ணிக்கையானது, அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸிற்கு மருந்துக் கண்டுபிடிக்க இயலாமல், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் திணறி வருகின்றன்றனர் என்பது தான் உண்மை. தற்பொழுது வரை, இந்த வைரஸால் ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான் வேதை அளிக்கும் விஷயமாகும்.

HOT NEWS