13,000 பேர் கவலைக்கிடம்! 19,000 பேர் பலி! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

25 March 2020 அரசியல்
coronaitaly.jpg

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸால், தற்பொழுது வரை 19,000 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால், சீனாவினை விட இத்தாலியே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இந்த வைரஸால் 3,280 பேர் பலியாகி உள்ள நிலையில், இந்த வைரஸ் பரவ ஆரம்பித்து குறைந்த நாட்களிலேயே பெரிய அளவில் இத்தாலி நாடு தான் அதிக பாதிப்பினை சந்த்துள்ளது.

அங்குள்ள அனைத்து மருத்துவமனைகள், அரசாங்க கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் நோயாளிகள் குவிந்துள்ளதால், நோய் பாதிப்புள்ளவர்களை, சாலையிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த நாட்டில் இந்த வைரஸால் மார்ச் 25ம் தேதி நிலவரப்படி, சுமார் 6820 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 64,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, சிகிச்சைப் பெற்று வரும் நபர்களில், 13,000 பேர் அபாயகரமானக் கட்டத்தில் இருப்பதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுக்க 4,30,000 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS