தற்பொழுது புவியினை நெருங்கும் புதிய விண்கல்லால் புவிக்கு ஆபத்து இருக்காது என, நாசா தெரிவித்துள்ளது.
நாம் வாழும் புவிக்கு ஆபத்து எதவும் நேருமா என, நாசாவால் நியமிக்கப்பட்ட அமைப்பான சிஎன்ஈஓஎஸ், தற்பொழுது புதிய விண்கல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, புவியினை நோக்கி 1998 ஓஆர்2 என்ற புதிய விண்கல் வந்து கொண்டு இருக்கின்றது எனக் கூறியுள்ளது. இருப்பினும், இதனால் புவிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
புவிக்கு 75 லட்சம் தூரத்தில் எது வந்தாலும், உடனடியாக இந்த அமைப்புக் கண்காணிக்கத் துவங்கி விடும். அப்படி இருக்கையில், இந்த 1998 ஓஆர்2 என்ற விண்கல்லானது 63 லட்சம் தூரத்தில் வர உள்ளது என கணித்துள்ளது. இதனை, தீவிரமாக கண்காணித்துக் கொண்டும் இருக்கின்றது. இது சுமார், 4.1 கிலோமீட்டர் விட்டம் உடையது எனக் கணிக்கப்பட்டு உள்ளது. பல ஆயிரம் விண்கற்கள் புவிக்கு அருகில் நெருங்கி வந்து இருந்தாலும், புவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டது இல்லை.
இந்த 1998 ஓஆர்2 கல்லும், பெரிய அளவில் எவ்விதத் தாக்கத்தினையும் ஏற்படுத்தாது. புவிக்கும் நிலவிற்கும் இடையில் தூரமானது, சுமார் 3,85,000 கிலோமீட்டர் ஆகும். தற்பொழுது அந்தக் கல்லானது, புவியினை 16.4 மடங்கு அதிக நீளமுள்ள தூரத்தில் புவியினைத் தாண்டிச் செல்ல உள்ளது. இந்தக் கல்லானது, ஏப்ரல் மாதம் 29ம் தேதி, மதியம் 3.26 மணியளவில் புவியினைக் கடக்க உள்ளது எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.