2 கோடி மாணவிகள் பள்ளிக்கு வர முடியாது! மலாலா கூறுகின்றார்!

22 September 2020 அரசியல்
malala.jpg

கொரோனா பாதிப்பு முடிந்ததும் இரண்டு கோடி மாணவிகள் பள்ளிக்குத் திரும்புவதில் சிக்கல் உண்டாகும் என, மலாலா கூறியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சையி, குழந்தைகளின் கல்விக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் குரல் எழுப்பி வருகின்றார். இவருக்கு 17 வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் தற்பொழுது அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அவர் பேசுகையில், கொரோனா பாதிப்பு முடிந்த உடன், இரண்டு கோடி மாணவிகள் பள்ளிக்குச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

பெண் குழந்தைகள் குறைந்தது 12 ஆண்டுகளாவது படிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான நிதியுதவியினை எப்பொழுது ஒதுக்குவீர்கள், எப்பொழுது புலம்பெயர்வோரை பாதுகாக்க முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். கொரொனா பாதிப்பால், பெண் குழந்தைகளின் கல்விக்கு கிடைக்க வேண்டியி நிதியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு கிடைக்கின்றக் கல்வியில் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் கவலைத் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS