ரஷியாவில் ஆற்றில் கலந்த 20 டன் ஆயில்! சிவப்பாக மாறிய அவலம்!

05 June 2020 அரசியல்
russianredriver.jpg

ரஷியாவில் உள்ள ஆற்றில், 20 டன் ஆயில் கலந்ததால் ஒரே ஆறே சிவப்பு நிறமாக மாறிய அவலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஷியாவின் ஸிபேரியான் நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது நோரில்ஸ்க்.

இந்த இடத்தில், மின்உற்பத்தி செய்யும் நிலையம் உள்ளது. அந்த நிலையத்திற்காக பெரிய ஆயில் சேர்த்து வைக்கும் டேங்க் உள்ளது. இந்த டேங்க் திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அந்த டேங்கில் இருந்த ஆயிலானது வெள்ளமாக ஓட ஆரம்பித்தது.

இந்த ஆயிலானது, அப்பகுதிக்கு அருகில் உள்ள ஆம்பார்னாயா ஆற்றில் கலந்தது. தொடர்ந்த பல டன் ஆயில்கள் ஆற்றில் கலந்ததால், அந்த ஆறானது முற்றிலும் சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. இந்த ஆறானது, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப எப்படியும் 10 ஆண்டுகளாவது ஆகும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. இதனைச் சுத்தம் செய்ய சுமார் 1.16 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் எனவும் கூறப்பட்டு வருகின்றது.

இந்த விஷயம் தாமதமாக அதிபர் புடினிக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அறிந்த புடின், உடனடியாக அந்த ஆற்றினைச் சுத்தம் செய்யும் பணியினைத் தொடங்க உத்தரவிட்டு உள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் லெப்ட் டூ ரைட் என திட்டித் தீர்த்தும் உள்ளார்.

HOT NEWS