200 ரயில்கள் ஜூன் 1 முதல் இயக்கம்! ரயில்வே அறிவிப்பு!

20 May 2020 அரசியல்
indianrailways.jpg

வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் 200 ரயில்களை இயக்க உள்ளதாக, இந்திய இரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். அவர் அறிவிப்பின்படி, வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்களைப் போல, 200 ரயில்களை இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளுக்கு இயக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ரயில்களில் ஏசி கோச்கள் இருக்காது எனத் தெரிய வந்துள்ளது. இதற்கான கால அட்டவணையும், டிக்கெட் புக்கிங்கும் விரைவில் தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ரயில்கள் அனைத்தும் மிகவும் நீண்ட தூரப் பயணத்தினைக் கொண்டவையாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இவைகள், பல நகரங்களையும், கிராமங்களையும் இணைக்கும் விதத்தில் இயக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இந்த ரயில்களின் எண்ணிக்கையானது 400 ஆக உயர்த்தப்படும் எனவும் தெரிகின்றது.

167 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்திய ரயில்வேயில் 14,000 பயணிகள் ரயில்கள் உள்ளன. அதனை தினமும், இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS