2000 ரூபாய் அச்சடிப்பது நிறுத்தம்!

15 October 2019 அரசியல்
2000.jpg

2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியினை, இந்தியாவின் பிரதான முதன்மை வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நிறுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், நபர் ஒருவர் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள ரிசர்வ் பேங் ஆப் இந்தியா, கள்ள நோட்டுக்களைத் தடுக்கும் பொருட்டு, 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதனை நிறுத்தி உள்ளதாக, அறிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பொழுது, இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என அறிவிக்கப்பட்டது. பின்னர், அவைகளுக்குப் பதிலாக, புதிதாக 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. தொடர்ந்து, 2000 ரூபாயைப் பயன்படுத்தி பணத்தினை எளிதாகப் பதுக்க இயலும் எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன.

இந்நிலையில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணியினை, ஆர்பிஐ நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

HOT NEWS