20000 வீரர்களை குவித்த சீனா! ஆயுதங்களை குவிக்க ஆரம்பித்த இந்தியா!

01 July 2020 அரசியல்
chinesearmy.jpg

லடாக் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில், கூடுதலாக 10,000 முதல் 12,000 வீரர்களை சீன இராணுவம் குவித்துள்ளதால் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இரண்டு நாட்டு இராணுவ வீரர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, இந்திய வீரர்கள் 20 பேரினை சீன இராணுவம் அத்துமீறித் தாக்கிக் கொன்றது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில், தொடர்ந்து அத்துமீறல்கள் மற்றும் படைக்குவிப்பு ஆகியவைகளில் சீன இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. லடாக் பகுதியில் பெரிய கட்டுமானங்களையும், அதிக வாகனங்களையும் சீன இராணுவம் நிலைநிறுத்தி உள்ளது. இந்த தொடர் ஆட்குவிப்பால், அதிக பதற்றம் உருவாகி உள்ளது. ஏற்கனவே 10,000 வீரர்கள் அப்பகுதியில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது கடந்த 48 மணி நேரத்திற்குள் மேலும், 10,000 வீரர்களை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது.

அதே போல், சீனாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவின் படைகளும் குவிக்கப்பட்டு வருகின்றன. லே பகுதியில், இந்தியாவின் சுகோய் ரகப் போர் விமானங்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாக, விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தியாவும் தன்னுடைய படைகளை, லடாக் பகுதிகளில் குவித்து வருகின்றது.

மேலும், இந்தியாவின் சார்பில், லடாக் பகுதியில், சீனா இராணுவமும், விமானங்களும் அத்துமீறி நுழையாமல் இருக்கவும், தாக்குதல் நடத்தாமல் இருக்கவும், எம்ஆர், பைதான்-5, டெர்பி, ஆகாஷ் ரக ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இந்த ஏவுகணைகள் மிகத் துல்லியமாக, எதிரி நாட்டு போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தும் வலிமை வாய்ந்தவை. அதே போல், இந்தியாவின் டி90 பீஷ்மா பீரங்கிகளும் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகின்றன.

HOT NEWS