2,000 ரூபாய் அச்சடிப்பு குறைப்பு!

31 August 2019 அரசியல்
2000.jpg

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கபட்டுள்ளது என, புதிய தகவல் வெளியாகி உள்ளது. 2016ம் ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதை அடுத்து, பழைய ரூபாய் நோட்டுக்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, புதியதாக 10, 20, 50, 100, 200, 500, 1000, மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இந்த 2,000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பதுக்கி வைக்க எளிதாக இருக்கின்றன. மேலும், இதனை அச்சடிக்க செலவும் சற்று அதிகம் என்பதால், அதனை அச்சடிப்பதனை ரிசர்வ் வங்கிக் குறைத்துள்ளது. அதே போல், மற்ற நோட்டுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

HOT NEWS