நாளுக்கு நாள் கண்டுபிடிப்புகள் ஆயிரக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், ஒரு சிலக் கண்டுபிடிப்புகள் மட்டுமே உலகளவில் பிரபலமடைகின்றன. அதுமட்டுமின்றி, அவை மட்டுமே அனைவருக்குமேப் பயன்படும் வகையிலும் இருக்கின்றன. குறிப்பாக, உலகளவில் அதிகமாக கண்டுபிடிக்கப்படும் விஷயங்களில் பெரும்பாலானவைத் தொலைத்தொடர்புத் துறையிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், நமக்கு தற்பொழுது அதிகளவில் மருத்துவக் கண்டுபிடிப்புகளேத் தேவை.
சாகாத ஜீன்நாம் இறந்தப் பின் நம்முடைய உடலில் உள்ள ஜீன்களும் இறந்துவிடுகின்றன. ஆனால், சென்ற ஆண்டு ஒரு சாதனையை வாஷிங்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் படைத்துள்ளனர். இதுவே உலகளவில் மிகவும் பேசப்பட்ட மாபெரும் கண்டுபிடிப்பாகும். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் நாம் இறந்தப் பின் நம்முடைய உடலில் உள்ளப் பாகங்களை மற்றவர்களுக்குத் தானம் அளிக்கும் பொழுது அவைக் கெடாமல் இருக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது.
ஒன்பதாவது கோள் கண்டுபிடிக்கப்பட்டதுபுளூட்டோவை விஞ்ஞானிகள் கழட்டிவிட்டப் பிறகு மொத்தம் 8 கோள்களே உள்ளதாகக் கூறினர். ஆனால், சென்ற ஆண்டு ஒன்பதாக ஒருக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். சென்ற ஆண்டு ஜனவரி மாதம் காண்ஸ்டன்டின் மற்றும் பேடிக்கின் என்ற விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புளூட்டோவை விட சுமார் 5,000 மடங்குப் பெரியது என நம்புகின்றனர். இது பூமியிலிருந்து சுமார் 17,000 ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் கணித்துள்ளனர்.
வலிப்பு நோயைக் குணப்படுத்தக் கூடிய ஸ்டெம் செல்சென்ற ஆண்டு ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியால் வலிப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஸ்டெம் செல் மருத்துவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் பதினெட்டு நோயாளிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு உள்ள வலிப்பு நோய்க்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை அளித்து நோயைக் குணப்படுத்திச் சாதித்துக் காட்டியுள்ளனர். அதே சமயம், எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் மருத்துவம் செய்ததே இதன் உச்சகட்ட சாதனையாகும்.
5D-ஸ்டோரேச்இது கணிணி உலகின் உச்சபட்ச முயற்சி மற்றும் வெற்றி எனக் கூடக் கூறலாம். இது சாதாரணக் கண்ணாடி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுப் பார்ப்பதற்கு மிகச் சிறிய வட்ட வடிவ கண்ணாடி துண்டைப் போல இருக்கும். ஆனால், இது சுமார் 360 டெராபைட் தகவல்களை சேமிக்க வல்லது. இது இயற்கைச் சூழ்நிலைகளாலும், விபத்துக்களாலும் எவ்விதப் பாதிப்பும் அடைவதில்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
இரண்டாவது நிலாஇது நாள் வரையில் நாம் நம்முடையப் பூமிக்கு ஒரு நிலா மட்டுமே இருப்பதாக நம்பினோம். ஆனால், விஞ்ஞானிகள் இப்பொழுது இரண்டாவது நிலாவைக் கண்டுபிடித்துள்ளனர். இதுப் பார்ப்பதற்கு சுமார் 120 அடி உயரமும் 300 அடி அகலமும் உடையப் பனிப்பாறையாக உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். இது அளவில் கொஞ்சம் பெரியப் பாறைப் போல இருந்தாலும் இதுப் பூமியைப் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சுற்றிவருவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 2016 HO3 எனப் பெயரிட்டுள்ளனர்.