2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

23 October 2019 அரசியல்
2020calendar.jpg

வரும் 2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அரசு.

அதன் படி, ஜனவரி 1 புத்தாண்டு விடுமுறை. ஜனவரி 15ம் தேதி பொங்கல் விடுமுறை, 16 ஜனவரி திருவள்ளூவர் தினம், 17ம் தேதி உழவர் தின விடுமுறை. ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தின விடுமுறை, மார்ச் 25ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு, ஏப்ரல் 6ம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 10ம் தேதி புனித வெள்ளி விடுமுறை.

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு விடுமுறை, மே ஒன்றாம் தேதி மேன தின விடுமுறை, மே 25ம் தேதி ரம்ஜான் விடுமுறை, ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் விடுமுறை, ஆகஸ்ட் 11ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விடுமுறை. ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை, ஆகஸ்ட் 30ம் தேதி மொஹரம் பண்டிகை விடுமுறை, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை, அக்டோபர் 25ம் தேதி ஆயுத பூஜை விடுமுறை, அக்டோபர் 26ம் தேதி விஜய தசமி விடுமுறை, அக்டோபர் 30ம் தேதி மிலாடி நபி விடுமுறை, நவம்பர் 14ம் தேதி தீபாவளி விடுமுறை, டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி வங்கிகள் முழு வருடக் கணக்கு முடிவிற்காக, அரசு விடுமுறையானது வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 14ம் தேதி அன்று, குழந்தைகள் தின விழா நாளில், தீபாவளி வருவதால் இரண்டிற்கும் சேர்த்து, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 22 நாட்கள் வரும் 2020ம் ஆண்டு, அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

HOT NEWS