2021 முதல் ஐஐடியில் தமிழ் கேள்வித் தாள்! மத்திய அரசு அறிவிப்பு!

29 November 2019 அரசியல்
exam.jpg

ஐஐடி கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு, ஜேஈஈ என்ற தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும். அதற்குரியக் கேள்வித் தாளானது, தற்பொழுது ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் பிற பிராந்திய மொழிகளிலும் கேள்வித்தாளினை உருவாக்க வேண்டும் என, சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், வரும் 2021ம் ஆண்டு முதல், தமிழ் உட்பட மொத்தம் 11 மொழிகளில், ஐஐடி தகுதித் தேர்வானது நடைபெறும் என அறிவித்துள்ளது.

2020ம் ஆண்டுக்கானத் தகுதித் தேர்விற்கு, சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கு ஏற்கனவே கேள்வித்தாள் தயாரித்து விட்டதாகவும், புதிதாக உருவாக்க காலத் தாமதம் ஆகும் எனவும், அதனால் வரும் 2021 முதல் நடைபெறும், ஜேஈஈ தேர்வானது, பிராந்திய மொழிகளிலும் நடைபெறும் என கூறியுள்ளது.

இவ்வாறு, பிராந்திய மொழிகளில் தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம், இந்தத் தேர்வினை பள்ளிகளில் தாய் மொழிக் கல்வியில் பயிலும் அனைவருமே எழுத இயலும். மேலும், ஐஐடி கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைத்தால், அதை விட மிகப் பெரிய அதிர்ஷ்டம் எதுவுமில்லை. தரமான கல்வி, நல்ல சம்பளத்தில் வேலை என வாழ்க்கையே பிரச்சனை இல்லாமல் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS