213 பேர் பலி! உயரும் மரணங்கள்! மருந்தில்லாமல் மருத்துவர்கள் திணறல்!

31 January 2020 அரசியல்
virus.jpg

தற்பொழுது வரை, கொரனா வைரஸ் காரணமாக, சீனாவில் மட்டும் 213 பேர் பலியாகி உள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் உள்ள ஊஹான் பகுதியில் உள்ள வன விலங்குகள் சந்தையில் இருந்து, கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் மருத்துவ அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூட்டமாக செல்ல வேண்டாம் என, அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது வரை, 13,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும், அவர்களுக்கான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்றுடன் சேர்த்து மொத்தமாக 213 பேர் இந்த கொரனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய வசதிகளை செய்து தர, இரண்டு பெரிய மருத்துவமனைகளை சீன அரசாங்கம் உருவாக்கி வருகின்றது. ஒவ்வொரு மருத்துவமனையும் சுமார் 1600 முதல் 2,000 படுக்கை வசதிகளை உடையது. உயர்தர மருத்துவ உபகரணங்களும் அங்கு வரவழக்கப்பட உள்ளன.

சுமார் 2,500க்கும் அதிகமான ஊழியர்கள், இந்த மருத்துவமனையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள், இந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது வரை, இந்த கொரானா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ அவசர நிலையினை அறிவித்துள்ளது. இதற்கு முன், ஐந்து முறை இந்த அவசர நிலையினை அறிவித்து இருக்கின்றது.

இந்த வைரஸானது, மிக வேகமாகப் பரவி வருவதால், கிட்டத்தட்ட 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS