21,600 கோடியில் இராணுவ ஒப்பந்தம்! வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லை!

26 February 2020 அரசியல்
moditrumpdeal.jpg

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக, இந்தியாவிற்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில், 21,600 கோடியில் இராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சுற்றுப் பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று, டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் மோடியும் கலந்தாலோசித்தனர். பின்னர், அமெரிக்க இராணுவத்தினைச் சேர்ந்த எம்-எச் 60 ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள் சுமார் 24ம், ஏ.எச் 64 ஈ அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஆறும் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், சில பெயர் குறிப்பிடப்படாத ஆயுதங்களும் ஒப்பந்தமாகி உள்ளன.

அதே சமயம், மூன்று இதர ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன. மனநல மருத்துவம், மருந்துப் பொருட்கள் உற்பத்தி, பாதுகாப்பு, நிர்வாகம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும், அமெரிக்க எண்ணெய் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்த ஒப்பந்தங்களை உறுதிபடுத்தவும், புதிய விதிகளைப் பற்றியும், இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுடன், மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

HOT NEWS