பீகாரில் கடுமையான இடி மின்னல் 22 பேர் பலி!

03 July 2020 அரசியல்
lightninglatest.jpg

பீகாரில் நேற்று ஒரே நாளில், கடுமையான இடி மற்றும் மின்னல் காரணமாக 22 பேர் பலியாகி உள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, பீகாரில் ஏற்பட்ட கடுமையான இடி மின்னல் காரணமாக 80 பேர் பலியாகி இருந்தனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது அங்கு மீண்டும் மின்னல் தாக்கி 22 பேர் பலியாகி உள்ளனர். ஏற்கனவே வட இந்திய மாநிலங்கள் கடும் மழை, புயல், கொரோனா வைரஸ், வெட்டுக்கிளிகள் தாக்குதல் எனப் பலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், திடீரென்று இப்படியான இடி மற்றும் மின்னல் போன்ற பாதிப்புகளால், கடுமையான தாக்கத்தினை சந்தித்து வருகின்றன.

பீகார் மாநிலத்தின் கிழக்கு சாம்பரன், சமஸ்திபூர், பாட்னா, ஷியோஹர், கதிஹார், மாதேபூரா, பூர்னியா உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தகைய இடி மற்றும் மின்னலால் உயிர் சேதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு சுமார் 4 லட்ச ரூபாயினை வழங்க அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இது அம்மாநிலத்தில், சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS