உலகம் முழுக்க 22,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு!

13 April 2020 அரசியல்
nursecoronavirus.jpg

உலகம் முழுக்கப் பணிபுரிந்து வருகின்ற சுகாதாரத் துறைப் பணியாளர்களில், 22,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் இருந்து கொரோனா வைரஸானது, உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்நிலையில், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் இந்த கொரோனா வைரஸானதுப் பரவி வருகின்றது.

மொத்தமாக 52 நாடுகளில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 22,073 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறப்படு உள்ளது. இது, பணிபுரியும் இடங்களில் இருந்தோ, சமூகத் தொற்று மூலமோ பரவி இருக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS