உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை 8,900 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், 1,90,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்கப் பல நாடுகள், தங்களுடைய எல்லைகளை சீல் செய்துள்ளனர். இத்தாலி ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இதன் வீரியம் அதிகமாக உள்ளது.
இத்தாலி, தன்னுடைய நாட்டின் வடக்குப் பகுதிக்கு மொத்தமாக சீல் வைத்துள்ளது. ஒன்றரைக் கோடி பேரினை மொத்தமாக கண்காணித்து வருகின்றது. இந்நிலையில், இந்த வைரஸ் குறித்து பிரிட்டன் நாட்டின் இம்பீரியல் காலேஜ் லண்டன் கல்லூரியினைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அந்தக் கல்லூரியில் பணிபுரியும் கணித உயிரியல் பிரிவின் பேராசிரியர் நெய்ல் பெர்குசன் தலைமையில், இது குறித்த சர்வே ஒன்று கணிக்கப்பட்டது. கடந்த காலங்களில் வந்த நோய்களை விட, தற்பொழுது உருவாகியிருக்கும் இந்த கொரோனா வைரஸ் நோயானது, மிக வேகமாகப் பரவுகின்றது.
அரசாங்கம் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், எப்படியும் 2,50,000 பேர் மரணமடைவர் எனக் கணித்துள்ளனர். அதே போல், விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், கண்டிப்பாக இந்த வைரஸால் 22 லட்சம் பேர் மரணமடைவர் எனவும், பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்படும் எனவும், அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
source:www.ndtv.com/world-news/coronavirus-news-british-study-predicts-2-2-million-covid-19-deaths-in-us-50-000-in-uk-2196477