இதுவரை 230 கிலோ தங்கம் கடத்தல்! 20 முறை நடைபெற்றுள்ளது அம்பலம்!

21 July 2020 அரசியல்
swapnasuresh.jpg

கேரளாவினை உலுக்கியுள்ள தங்கம் கடத்தல் சம்பவத்தில், தற்பொழுது அதிரடியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் வேலை செய்த சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் உள்ளிட்டோரை என்ஐஏ பிரிவினர் கைது செய்தனர். இந்த வழக்கினைத் தீவிரமாக, தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதே போல், கடந்த வாரம், துபாயில் உள்ள தூதரக அலுவலகத்திற்கு புதிய பார்சல் வந்துள்ளது. அங்கு வேலை செய்துள்ள பைசல் என்ற நபர், பார்சல் மூலம் தங்கம் கடத்தியுள்ளதைக் கண்டுபிடித்த போலீசார், அவரை அங்கு கைது செய்தனர். கடந்த வெள்ளிக் கிழமை அன்று அவரை கைது செய்தப் போலீசார், தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மூன்று கட்டங்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ள விசாரணையில், தொடர்ந்து இது போன்று 20 முறைகளுக்கும் மேலாக, தங்கம் கடத்தி இருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதுவரை 230 கிலோ தங்கத்தினை கடத்தி இருப்பதாக, பைசல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்பொழுது இவருக்கும், ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா என, போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

HOT NEWS