உபியில் சோகம்! 24 புலம் பெயரும் தொழிலாளர்கள் சோகம்!

16 May 2020 அரசியல்
migrantworkers.jpg

உத்திரப் பிரதேசத்தில், இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே-17க்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை பாரதப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த சூழ்நிலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குப் பணிக்குச் சென்றவர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதால், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் புலம் பெயரும் தொழிலாளர்கள், லாரிகள், டிரக்குகள், வேன்கள், என பயன்படுத்தி பயணிக்கின்றனர். பல லட்சம் பேர் வெறும் நடைபயணமாகவே, தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

டெல்லியில் இருந்து பல லட்சக்கணக்கான பொதுமக்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 50 நபர்களை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்கானது, உத்திரப்பிரதேசத்தின் அவுரைய்யா மாவட்டம் அருகில் வரும் பொழுது, டெல்லியில் இருந்து வந்த வேன் மீது மோதியது.

இதில், நிலைத் தடுமாறிய அந்த ட்ரெய்லர் டிரக்கானது கீழே சரிந்தது. இந்த எதிர்பாராத விபத்தால், அதில் அமர்ந்து வந்த 50 பேரும் கீழே விழுந்தனர். அதில் தற்பொழுது வரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 15 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக் காலை 3.30 மணியளவில் நடைபெற்று உள்ளது.

HOT NEWS