2.5 கோடி பேரின் வேலை பறிபோகும் வாய்ப்பு!

19 March 2020 அரசியல்
layoffnow.jpg

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, உலகப் பொருளாதாரமே சிக்கலில் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சிகரமான தகவலை ஐநா தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

தற்பொழுது வரை மருந்து வெளியாகாமல் இருப்பதால், இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. இதனால், ஐநா அதிபர் கவலைத் தெரிவித்துள்ளார். சர்வதேச உலக சுகாதார அமைப்பின் தலைவரோ, இந்த கொரோனா வைரஸ் குறித்து தன்னுடைய வேதனையைத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தொழிலாளர் நல அமைப்பானது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த கொரோனா வைரஸானது தொடர்ந்து பரவி வந்தால், பொருளாதார மந்தநிலை மற்றும் வர்த்தகப் பாதிப்பின் காரணமாக, இரண்டரைக் கோடி நபர்களின் வேலையானது பறிக்கப்படலாம் என கணித்துள்ளது.

மேலும், மூன்று கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பண இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், இந்த இழப்பினைக் குறைக்க இயலும் எனக் கூறியுள்ளது. இந்நிலையில் கனடா நாடானது, தன்னுடைய எல்லைப் பகுதிகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது.

HOT NEWS