2600 ரயில்கள் இயக்கத் திட்டம்! ரயில்வே வாரியத் தலைவர் பேட்டி!

24 May 2020 அரசியல்
indianrailways.jpg

அடுத்த பத்து நாட்களுக்குள் இந்தியாவின் பலப் பகுதிகளுக்கும் சுமார், 2600 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக, வினோத் குமார் யாதவ் கூறியிருக்கின்றார்.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அடுத்த பத்து நாட்களுக்குள் 2600 ரயில்களை இயக்கத் திட்டம் தயார் நிலையில் உள்ளது என்றுக் கூறியுள்ளார். ஏற்கனவே புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றார். தற்பொழுது 200 ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. டெல்லியில் இருந்து 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரயில் நிலையங்களில் துரித வகை உணவுகள் மட்டுமே விற்கப்பட உள்ளன. மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும் என, அனைத்து ரயில்நிலையங்களுக்கும் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பெருவாரியான ரயில்கள் உத்திரப் பிரதேசத்திற்கும், பீகார் மாநிலத்திற்கும் இயக்க உள்ளதாகவும், டெல்லி உள்ளிட்டவைகளுக்கும் ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த ரயில்கள் மூலம் சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமானோர் இடப்பெயர்ச்சி அடைவர் எனவும் அவர் குறிப்பிட்டார். மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால், ரயில்களை இயக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கடிதமும், தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோயம்புத்தூர்-மயிலாடுதுறை, விழுப்புரம்-மதுரை, கோயம்புத்தூர்-காட்பாடி, திருச்சி-நாகர்கோவில் வழித்தடங்களில் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், ஏசி கோச் இருக்காது. முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க இயலும், 30 நாட்களுக்கு முன்பிருந்தே, இந்த ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

HOT NEWS