2,701 பேர் பலி! 80,150 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

25 February 2020 அரசியல்
coronaviruschina.jpg

சீனாவில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து, உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ள இந்த கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது வரை, உலகம் முழுவதும் சுமார், 2701 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 50 நாட்களுக்குள் இந்த வைரஸானது, உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இது எப்படி, இவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பது பற்றி, தற்பொழுது வரை தெரியவில்லை. மேலும், பல நாடுகளில் இந்த வைரஸால் மரணம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவினைப் பொருத்தமட்டில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று பேரில், இரண்டு பேர் குணமடைந்து விட்டனர். ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தற்பொழுது, ஊஹான் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்ட்ரல் ஹாஸ்பிட்டலில் பணிபுரிந்து வந்த, 42 வயதுடைய மருத்துவர் ஹூவாங் வெஜ்ஜூங், நோயாளிகளுக்கு மருத்துவம் செய்த பொழுது, நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நோய் தொற்றின் காரணமாக, 2701 பேர் பலியாகி உள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார், 80,150 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தற்பொழுது வரை, 5,000 பேர் குணமாகி வீட்டிற்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS