தினமும் 2.6 லட்சம் பரிசோதனைகள்! ஐசிஎம்ஆர் தகவல்!

10 July 2020 அரசியல்
icmr.jpg

இந்தியா முழுவதும், தினமும் 2.6 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுவதாக, இந்தியா மருந்து மற்றும் ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றானது, அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், ஊரடங்கானது ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தினமும் கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரித்துள்ளன மாநில அரசுகள். அதே போல், மருத்துவ வசதிகளும் தற்பொழுது தற்காலிகமாக அதிகரிக்கப்பட்டு உள்ளன.

மும்பையில் கொரோனா நோயாளிகளுக்காக புதிதாக 5 தற்காலிக மருத்துவமனைகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் முதலியவை, தற்காலிகமாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மாறியுள்ளன.

இந்த சூழ்நிலையில், ஐசிஎம்ஆர் அமைப்பின் அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த அமைப்பினைச் சேர்ந்த விஞ்ஞானி நிவேதிதா குப்தா பேசுகையில், தற்பொழுது இந்தியா முழுவதும் சராசரியாக 2.6 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இது இன்னும் அதிகரிக்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.

தற்பொழுது வரை, 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 4,75,000க்கும் அதிகமானோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 21,129 பேர் பலியாகி இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

HOT NEWS