எகானாமிக் டைம்ஸ் கணிப்பின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், கிட்டத்தட்ட 2,50,000 வேலைவாய்ப்புகளை மொபைல்போன் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன, எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் மற்றும் இண்டெக்ஸ் ஆகிய நிறுவனங்கள், 20,000 முதல் 25,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், சீன மொபைல் நிறுவனங்களான, ஒன் பிளஸ் மற்றும் சியோமி ஆகியவற்றின் வளர்ச்சியில், மொபைல் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆட்களின், எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 2,50,000 ஊழியர்களை தற்பொழுது வரை, கடந்த இரண்டு வருடங்களில், பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய கம்பெனியில் இருந்து நீக்கியுள்ளன. இது மொத்தமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 10% ஆகும்.
தொடர்ந்து அதிகரித்துள்ள போட்டி, ஜியோ நிறுவனம் வழங்கும், 4ஜி ஜியோ போன், மற்றும் மற்ற விலை மலிவானப் போன்களால், இந்த வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர். மேலும், தங்களுடைய நிறுவனத்தை லாபத்தை ஈட்டும் வழியில் கொண்டு செல்ல, இந்த பணிநீக்கம் முதலான செயல்களில் நிறுவனங்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.