17 நாள் தனிமை போதும்! 2வது பரிசோதனை தேவையில்லை! மத்திய அரசு!

12 May 2020 அரசியல்
loveagarwal.jpg

லேசான கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள், தங்களுடைய வீட்டிலேயே 17 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். இருப்பினும், பொருளாதாரப் பிரச்சனையின் காரணமாக பல ஊரடங்கு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், வருகின்ற மே-17ம் தேதியுடன் ஊரடங்கானது முடிவிற்கு வருகின்றது.

இதற்குப் பிறகும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், அனைத்துப் பகுதிகளிலும் நீட்டிக்கப்படாது எனத் தெரிகின்றது. இந்நிலையில், தனிமைப்படுத்துதல் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் உள்ளதாக, லேசான அறிகுறிகளை உடையவர்கள், தங்களை வீட்டிலேயே 17 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டால் போதும். அவர்களுக்கு உதவிக்காக ஒருவர் உடனிருக்க வேண்டும். 17 நாட்கள் முடிந்ததும், அவர்கள் தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளலாம்.

அதே போல் லேசான, மிதமான மற்றும் தீவிரமான நோயாளிகள் எனவும் மத்திய சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பாதித்துள்ளவர்களை வகைப்படுத்தி உள்ளது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு எவ்விதக் காய்ச்சலும் இல்லாதவர்கள், தங்களுடைய தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளலாம். அதன் பின்னர், எவ்வித மருத்துவப் பரிசோதனையும் நடத்தத் தேவையில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.

நிலைமையைப் பொறுத்து லேசான, மிதமான மற்றும் தீவிரமான கொரோனா வைரஸ் நோயாளிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS