பூமிக்கு இரண்டாவது நிலா! சீனாவின் முயற்சி வெற்றிப் பெறுமா?

20 January 2020 தொழில்நுட்பம்
moon.jpg

இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், சீனா ஒரு மிகப் பெரிய விண்வெளிப் புரட்சியினைச் செய்ய உள்ளது. ஆம், தன்னுடைய நாட்டிற்கெனத் தனியாக ஒரு நிலவினை உருவாக்கி, அதனை அந்நாட்டிற்கு நேராக, விண்வெளியில் நிலை நிறுத்த உள்ளது.

தற்பொழுது இயற்கையாக அமைந்துள்ள நிலவானது, நான்கு லட்சத்தில் ஒரு பங்கு அளவிலான சூரிய ஒளியினை மட்டுமே பிரதிபலித்து வருகின்றது. இதனால், இரவு நேரத்தில், புவியின் அனைத்துப் பகுதிகளிலும் வெளிச்சம் கிடைப்பதில்லை. மின்சார வெளிச்சமேப் பயன்படுகின்றது. இதன் விளைவாக, மின் தட்டுப்பாடு மற்றும் தட்ப வெப்ப உயர்வு உண்டாகின்றது. இவைகளை குறைக்கும் பொருட்டு, சீனாவிற்கு என தனியாக ஒரு நிலவினை அந்நாட்டு விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் உருவாக்கி வருகின்றனர்.

இந்த நிலவானது, தற்பொழுது இயற்கையாக உள்ள நிலவினை விட, சுமார் 8 மடங்கு பிரகாசமானது. மேலும், இந்த நிலவானது, சூரிய ஒளி மூலம் சக்தியினைப் பெற்று செயல்படும். பின்னர், சூரிய ஒளியினை தன் நாட்டின் மீது பிரதிபலிக்கும். இதனால், அந்நாட்டில் இரவில் விளக்குகளின் உதவியானதுத் தேவையிருக்காது என நம்புகின்றனர். மின்சாரத் தேவையும் மிச்சமாகும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் யுவான் அளவிற்கு மின்சாரம் சிக்கனம் செய்ய முடியும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலவின் காரணமாக, உயிரியல் செயல்பாட்டிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும், இது ஒரு செயற்கைக் கோளினைப் போன்றே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, இந்த நிலவானது சிறிய அளவில் உருவாக்கப்படும் எனவும், அந்த நிலவானது 50 மைல் சுற்றளவிற்கு வெளிச்சம் தரும் வகையில், நிலை நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

HOT NEWS