சென்னை டிஜிபி அலுவலகத்தில் கொரோனா! 2 காவலர்கள் பாதிப்பு!

03 May 2020 அரசியல்
coronaclean.jpg

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த, இரண்டு காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது, மே-17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல விதிகளும், விதி விலக்குகளும் அரசாங்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளன. பல நிறுவனங்களுக்கு, அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியினை வழங்கி உள்ளது. இந்த கொரோனா வைரஸால், சென்னை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை கண்காணிக்கும் பணியிலும், கட்டுப்படுத்தும் பணியிலும், தமிழக சுகாதாரத் துறையும், காவல்துறைப் பணியாளர்களும் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இவர்கள் உளவுத் துறைக்காக பணியாற்றியவர்கள். இவர்கள், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து பொழுது, நடத்தப்பட்ட சோதனையில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்பொழுது விசாரிக்கப்பட்டு, தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் இருவரும், தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த, சக காவலர்கள் மத்தியில் பீதியினைக் கிளப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், சென்னையில், 98% அறிகுறிகளே இல்லாமல், இந்த நோய் பரவுகின்றது.

HOT NEWS