சாத்தான்குளம் விவகாரம்! 3 பேர் சிபிஐ ஆபிசிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்!

21 July 2020 அரசியல்
sathankulamlockup.jpg

சாத்தான்குளம் தந்தை மகன் கொல்லப்பட்ட விவகாரத்தில், 10 பேரினை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இதில், தற்பொழுது 3 பேரை விசாரணைக்காக தங்களுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மே மாதம் 19ம் தேதி அன்று, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிங்ஸ் ஆகியோரை விசாரணைக்காக, அப்பகுதி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மர்மமான முறையில், இருவரும் உயிரிழந்தனர். பென்னிங்ஸ் திடீரென்று நெஞ்சு வலியால் துடித்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் பலியானார்.

இச்சம்பவம், இந்திய அளவில் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது, தாமாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்தது. இந்த வழக்கானது, சிபிசிஐடி தரப்பில் இருந்து சிபிஐ பிரிவிற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக மொத்தம் 10 பேரினை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

அதில் தற்பொழுது மூன்று பேரினை, மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த, நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ள நிலையில், மூன்று நாள் விசாரணைக்கு அவர்கள், மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

HOT NEWS