குரூப் 4 தேர்வு முறைகேடு! 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்! தொடரும் லிஸ்ட்!

27 January 2020 அரசியல்
tnpsc.jpg

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால், இதில் ஈடுபடத்தாக 3 அரசு ஊழியர்களை தற்பொழுது சஸ்பெண்ட் செய்துள்ளது, அரசு.

குரூப் 4 தேர்வில் முறைகேடு ஈடுபட்டதால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள் 99 பேரையும் தடை செய்தது டிஎன்பிஎஸ்சி. இதனால், அவர்களால் இனி வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத இயலாது. மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக தற்பொழுது வரை 9 ஊழியர்களிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடுகள் வெளிவரக் காரணமாக இருந்ததே, ஒரு ஆடு மேய்க்கும் தொழிலாளி தான். ஆம், 46 வயதுடைய ஆடு மேய்க்கும் தொழிலாளி, குரூப் 4 தேர்வில் முதலிடம் பெற்றார். இதனால், டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் எழுதிய தேர்வு மையத்தினைப் பற்றி ஆய்வு செய்த பொழுது தான் முறைகேடு நடைபெற்றது அம்பலமானது.

மறைகின்ற மையினைப் பயன்படுத்தி, தேர்வு எழுதியுள்ளனர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள். மேலும், அவர்கள் எழுதிய விடைத்தாளினை ஓடும் பேருந்திலேயே ஜெயக்குமார் என்பவர் மாற்றி வைத்துள்ளார். மேலும், ரமேஷ், திருக்குமரன் ஆகியோர் தேர்வு விடைத்தாளில் சரியான பதிலை எழுதியுள்ளனர்.

மேலும் தேர்வு மையத்திற்கும், மாணவர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக மேலும் பலர் வேலை செய்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால், சிபிசிஐடி போலீசார் தங்களுடைய விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் அளவிற்கு, இந்த முறைகேட்டில் கைமாறியுள்ளது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், ஜெயக்குமார் என்பவர் தற்பொழுது தலைமறைவாக இருப்பதால், அவரைத் தேடும் பணியானது முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில், அரசியல்வாதிகளும் சம்பந்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 லட்சம் ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரை, ஒவ்வொரு தேர்வர்களும் கொடுத்துள்ளனர் என, மாட்டிக் கொண்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS