தமிழகத்தில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு! அடுத்தக் கட்டமா?

24 April 2020 அரசியல்
coronaauto.jpg

கொரோனா வைரஸ் காரணமாக, உலகமே தற்பொழுது இருளில் மூழ்கியுள்ளது. போதுமான பண வருவாய் இல்லாமல், அனைத்து நாட்டு அரசுகளும் தள்ளாடி வருகின்றன. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

அரசாங்கம் பலக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இந்த வைரஸானது கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகின்றது. இதனால், வருகின்ற மே-3ம் தேதி வரை, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தினைப் பொறுத்தமட்டில், 1683 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 752 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 90 பேர் மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ் ஆகியிருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், சென்னையைச் சேர்ந்து மூன்று வயது பெண் குழந்தை, விருநகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக, நேற்று மட்டும் நான்கு குழந்தைகளுக்கு, இந்த வைரஸானது பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

HOT NEWS