திரைப்படத் தயாரிப்பாளர்கள் 30 பேர் சேர்ந்து, கூட்டாக அறிக்கை ஒன்றினை கையெழுத்துடன் வெளியிட்டு உள்ளனர். அதில், ஓடிடி எனப்படும் முறைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
திரைப்படத் தயாரிப்புத் துறையில், ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் இன்று நிறைய படங்கள் தயாரிப்பாளர்களின் திரைப்படம் எடுத்து வருகின்றார்கள்.
இன்றைய சூழ்நிலையில், தொழில்நுட்பம் வளர்ந்து ஓடிடி மூலம், புதிய திரைப்படங்கள் நேரடியாக வெளிவரும் முறையானது, உலகமெங்கும் உள்ள நிலையில், தற்பொழுது பிரபல ஓடிடி நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை, நல்ல தொகைக்கு வாங்கி, நேரடியாக வெளியிட முன்வந்திருப்பதை நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
ஏனென்றால், அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டினை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம், திரையங்கில் வெளியாகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில், வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் இந்த ஓடிடி முறையில் உள்ளன.
இந்தக் கொரோனா லாக்டவுன் முடிந்த உடன், அனைத்து சங்கத்தினைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, இதற்கான விதிகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.