300 கோடி ரூபாய்! அன்புச் செழியன் வீட்டில் மூன்றாவது நாளாக சோதனை!

08 February 2020 அரசியல்
incometax1.jpg

சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில், தற்பொழுது மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில், விஜய்க்கு வழங்கிய சம்பளம் மற்றும் பிற விஷயங்களில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என, சந்தேகத்தின் அடிப்படையில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அந்தப் படத்திற்கு பைனான்ஸ் செய்த, அன்புச் செழியனின் வீடுகள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

நெய்வேலியில், சூட்டிங்கில் இருந்த விஜயிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், விஜயிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை குறித்து, எந்தத் தகவலையும் வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை. அதே சமயம், அன்புச் செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தினை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் இடங்கள் மற்றும் அன்புச் செழியனின் வீடுகள் மற்றும் இடங்களில், தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனையின் முடிவில் தான் மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருக்கும் என, தெரியவரும். நேற்று நடைபெற்ற சோதனையின் முடிவில், 77 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 300 கோடி ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள் மற்றும் காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

HOT NEWS