முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்யின் மதிப்பானது, 76.05 ரூபாயாக குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, சர்வதேசப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு போய் உள்ளது. எப்பொழுது என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. ஏற்கனவே, இந்திய பொருளாதாரமானது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இதனிடையே, தற்பொழுது பரவி வரும் இந்த கோவிட்-19 வைரஸால், சர்வதேச வர்த்தகம் மட்டுமின்றி, இந்திய உள்நாட்டு வணிகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது, ஒரு டாலர் 76.05 பைசாவாக உள்ளது. இதனால், இன்று ஆரம்பித்த பங்குச் சந்தையானது, கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆரம்பமான 45 நிமிடத்தில், 3,000 புள்ளிகள் குறைந்ததால் 26,730 என்ற அளவில் அதன் நிலவரம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 45 நிமிடங்களுக்கு, அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் 10% அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டதால், முதலீட்டாளர்கள் கலங்கிப் போய் உள்ளனர். அடுத்து சென்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். இந்த நிலை நீடித்தால், இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய சிக்கலை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 4.7% ஆக உள்ளதாக, சர்வதேச நிதி நிர்ணயம் குறியிருப்பது குறிப்பிடத்தக்கது.