ஐந்தே நாட்களில், பிம்கேர்ஸ் திட்டத்திற்கு 3,076 கோடி ரூபாயானது கிடைத்துள்ளதாக, அந்த அமைப்புத் தெரிவித்து உள்ளது.
இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, பாரதப் பிரதமர் மோடி பிஎம்கேர்ஸ் கணக்கிற்கு நிதி வழங்க வேண்டும் எனவும், அதற்கேற்றாற் போல வரிச் சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார்.
அவர் மார்ச் 27ம் தேதி அன்று இந்த கணக்குக் குறித்து அறிவித்தார். அவர் அறிவித்த வெறும் 5 நாட்களுக்குள் 3,076.62 கோடி ரூபாயானது வசூலாகி இருப்பதாக அதனை நிர்வகிக்கும் அமைப்புத் தெரிவித்து உள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து 39.67 லட்சம் பணம் வந்துள்ளது எனவும், இந்தியாவில் இருந்து 3.075.85 கோடி ரூபாய் வந்துள்ளது எனவும் கூறியுள்ளது.
இந்த கணக்கானது 2.25 லட்ச ரூபாயுடன் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. பல முறை இந்த விஷயத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறிய எதிர்கட்சிகள், இது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றுக் கூறப்பட்ட நிலையில், இந்த அறிக்கையானது வெளியாகி உள்ளது.