இங்கிலாந்திற்கு 30 லட்சம் பாராசீட்டமால் மாத்திரைகள் ஏற்றுமதி! இந்தியா அறிவிப்பு!

11 April 2020 அரசியல்
covidmedicine.jpg

கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் இங்கிலாந்து நாட்டிற்கு, 30 லட்சம் பாராசீட்டமால் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸால், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதனால், இந்த நோயினைக் குணப்படுத்தக் கூடிய, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை இந்தியாவிடம் வழங்கும் படி, கேட்டுக்கொண்டு உள்ளன. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு தற்பொழுது இந்திய அரசு மருந்து வழங்க அனுமதித்துள்ளது. மேலும், தற்பொழுது இங்கிலாந்து நாட்டின் கோரிக்கையை ஏற்று, புதிய கன்சைன்மென்டினை அனுப்ப உள்ளது.

சுமார், 30 லட்சம் அளவுள்ள பெரிய கன்சைன்மென்டினை இந்திய அரசு இங்கிலாந்திற்கு அனுப்பி உள்ளது. இது ஏப்ரல் 12ம் தேதி அன்று, இங்கிலாந்தினைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கன்சைன்மென்டில், சுமார் 30 லட்சம் பாராசீட்டமால் மாத்திரைகள் அடங்கியுள்ளன. இது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அமைச்சர், தாரிக் அஹமத், இந்தியாவின் இந்த உதவியானது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மிக நெருக்கமாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து, இலங்கைக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவைகளில் ஏற்கனவே, கொழும்புவிற்கு ஒரு கன்சைன்மென்ட் அனுப்பப்பட்டு உள்ளது. மீண்டும், அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

HOT NEWS