டெல்லி கலவரம் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

27 February 2020 அரசியல்
delhiviolence12109.jpg

டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிகையானது, 34 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமியர்களும், ஆதரவு தெரிவித்து ஒரு குழுவினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். வட கிழக்கு டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வானது, இரு தரப்பினருக்கும் இடையிலான கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்பொழுது வரை, இந்த கலவரத்தால் 32 இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று, வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சாந்த் பாக் ஆகிய பகுதிகளில் பெரும் கலவரம் நடைபெற்றது. அதில், பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தால், தற்பொழுது அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து, துணை இராணுவப் படையினரும், போலீசாரும் தீவி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போலீசாரின் மெத்தனப் போக்கும், அலட்சியமுமே இவ்வளவு பெரிய கலவரத்திற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் செய்யும் வன்முறை வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் உள்ளன. இது குறித்து, விசாரிக்க இருந்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரே இரவில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்திற்கு மாற்றபட்டும் உள்ளார்.

106பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மொத்தமாக 18 எப்ஐஆர்கள் பதிவாகியும் உள்ளன. முதற்கட்டமாக, 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இரவு 12 மணியில் இருந்து காலை எட்டு மணிக்குள், கிட்டத்தட்ட 19 முறை தீயணைப்புத் துறைக்கு, உதவி கேட்டு போன் கால் வந்ததாக, டெல்லி தீயணைப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

டெல்லிக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்கள் தற்பொழுது என்ஐஏ குழுவின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

HOT NEWS