இங்கிலாந்தில், போலீசாரால் பிடிக்கப்பட்ட லாரி கண்டெய்னரில் இருந்த உடல்கள், சீனர்களின் உடல்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு அருகில் உள்ள, எஸ்ஸெக்ஸ் நகரில், சந்தேகத்திற்குரிய வகையில், லாரி கண்டெய்னர் சென்றதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த கண்டெய்னரை பிடித்து, விசாரித்தனர். அதில், 39 சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த லாரியானது, முழுவதும் குளிரூட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அதனை ஓட்டி வந்த வாகன ஓட்டுநரை கைது செய்தனர். இந்த வாகனம் பெல்ஜியத்தில் உள்ள ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனம் அயர்லாந்து நாட்டின் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வாகனத்தை ஓட்டியவருக்கு 25 வயது என, இதனை விசாரிக்கும் எஸ்ஸெஸ் நகர போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், இறந்தவர்களின் உடலினை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்த வாகனத்தில் இறந்து கிடப்பவர்கள் சீனாவினைச் சேர்ந்தவர்கள் எனும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
உடல் பாகங்கள் மற்றும் தோல் திருட்டிற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை சென்று கொண்டு இருக்கின்றது. இருப்பினும், இது இன்னும் நிச்சயமாக்கப்படவில்லை. அதே சமயம், கடந்த 2000ம் ஆண்டும் இதே போல், 50க்கும் மேற்பட்ட சடலங்கள் ஒரு லாரி கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டதை போலீசார் பிடித்தனர்.
அதில் இருந்த குளிர்சாதன வசதி செயலிழந்தால், அதில் இருந்த உடல்கள் சிதைந்துவிட்டன. மேலும், அதிலும் அதிர்ஷ்டவசமாக இருவர் தப்பி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை மனிதர்களைப் பிடித்து, இந்த லாரியில் உயிருடன் இருக்கும் பொழுதே அடைத்து, பின் அவர்களை கொண்டு சேர்க்க முயற்சித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இது குறித்துக் கவலைத் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
www.nytimes.com/2019/10/24/world/europe/truck-bodies-uk-chinese.html?smtyp=cur&smid=tw-nytimes