3.7 கோடி மதிப்பில் அலங்காரம்! டிரம்பிற்காக பிரம்மாண்டம் காட்டும் குஜராத்!

18 February 2020 அரசியல்
modi-trump.jpg

வருகின்ற 24ம் தேதி அன்று, இந்தியாவிற்கு வருகின்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த வருகையின் பொழுது, இந்தியப் பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் ஒரே மேடையில் உரையாற்ற உள்ளனர். இந்த சந்திப்பில், பல லட்சம் மதிப்புடைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் உள்ளன.

அஹமதாபாத் நகரில் உள்ள, மோதிரா மைதானத்தில் மோடி மற்றும் டிரம்ப் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதற்காக, அந்த மைதானம் தயாராகி வருகின்றது. இதனிடையே, அஹமதாபாத் விமானநிலையத்தில் இருந்து, மைதானத்திற்கு செல்லும் வழிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. வழி நெடுகிலும், ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

3.7 கோடி ரூபாய் மதிப்பில், பூத்தோரணங்கள், அலங்கார வளைவுகள், கலைநயம் மிக்க ஓவியங்கள் என, பார்ப்பவர் மனதைக் கிரங்கடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில், 1.7 கோடி ரூபாயானது, மோதிரா மைதானத்தின் அலங்காரத்திற்கும், மீதமுள்ள 2 கோடி ரூபாயானது, விமான நிலையம் முதல், மைதானம் வரை உள்ள பகுதிகளுக்கும் அலங்காரம் செய்ய ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வளவு பெரிய அளவில், பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுவது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். இதுவரை யாருக்காகவும், இப்படியொரு வரவேற்பு அளிக்கப்படவில்லை. இவ்வளவுப் பெரிய மரியாதையைப் பெரும் முதல் அமெரிக்க அதிபர் என்றப் பெருமையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெறுகின்றார்.

HOT NEWS