ஈரானுக்குச் சொந்தமான 4 கப்பல்களை, அமெரிக்க அரசு தற்பொழுது பறிமுதல் செய்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில், ஏற்கனவே பிரச்சனை உள்ளது. அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில், ஈரான் அரசு அமெரிக்காவின் பேச்சிற்கு இணங்க மறுப்பதன் விளைவாக, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு விதிதத்து. ஈரானின் மிகப் பெரிய வளமாக இருப்பது கச்சா எண்ணெய். அதனை விற்பதற்கும் தடை விதித்ததால், ஈரானுக்கு பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய நாட்டில் இருந்து தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிற்கு, ஈரான் அரசு கச்சா எண்ணெயினை ஏற்றுமதி செய்து வருகின்றது. அதன் காரணமாக, ஈரான் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தேத் தீர வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வழக்குத் தொடர்ந்தது. அதில், வெனிசுலாவிற்கு கச்சா எண்ணெயினை பாண்டி, லூனா, பெல்லா மற்றும் பெரிங் உள்ளிட்ட சரக்குக் கப்பல்களே எடுத்துச் செல்கின்றன எனவும், அதனை சிறைபிடிக்க அனுமதி வேண்டும் என்றுக் கூறியது.
சர்வதேசப் பகுதியாக இருக்கும் கடற்பகுதியில், சரக்குக் கப்பல்களை சிறைபிடிக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியது. இந்நிலையில், திடீரென்று சரக்கு ஏற்றிச் சென்ற இந்த நான்கு கப்பல்களும் கடலில் இருந்து மாயமாகின. இதனால், ஈரான் மற்றும் வெனிசுலா அரசுகள் குழப்பம் அடைந்தன. இது குறித்துத் தற்பொழுது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
காணாமல் போன இந்த நான்கு கப்பல்களும் தற்பொழுது அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.